மாவட்ட செய்திகள்

அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் வருமான வரித்துறையினர் 2-வது நாளாக சோதனை

நெல்லையில் அ.தி.மு.க. பிரமுகரின் வீட்டில் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

தினத்தந்தி

நெல்லை,

நெல்லை பாளையங் கோட்டை என்.ஜி.ஓ. பி காலனி ராம்விலாஸ் நகரை சேர்ந்தவர் ஆர்.எஸ்.முருகன். அ.தி.மு.க. பிரமுகரான இவர் நாங்குநேரி தொகுதி முன்னாள் செயலாளராக இருந்து வந்தார். இவர் அரசு துறை களில் உள்ள பல்வேறு ஒப்பந்த பணிகளை எடுத்து செய்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆர்.எஸ்.முருகன் வீட்டுக்கு மதுரை வருமான வரித்துறை துணை கமிஷனர் ஜெரால்டு தலைமையில் 20 அதிகாரிகள் கொண்ட குழுவினர் வந்தனர். இவர்கள் ஆர்.எஸ்.முருகன் வீடு மற்றும் அவரது உறவினர் வீட்டில் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனை நேற்று முன்தினம் மதியம் 2-30 மணி அளவில் தொடங்கியது. விடிய, விடிய தொடர்ந்து சோதனை நடந்தது.

வருமானவரி துறையின ரின் சோதனை 2-வது நாளான நேற்றும் நீடித்தது. தொடர்ந்து அதிகாரிகள் அவரது வீட்டில் சோதனை நடத்தினார்கள். காலை வரை இந்த சோதனை நடைபெற்றது. இதில் முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப் பற்றியதாக கூறப்படுகிறது. வீட்டில் இருந்த லேப்-டாப், பென்டிரைவ் ஆகியவற்றையும் அதிகாரிகள் ஆய்வுக்கு எடுத்துச்சென்று உள்ளனர்.

மேலும், அவருக்கு தமிழ் நாட்டில் மட்டும் அல்லாமல் வெளிமாநிலங்களிலும் சொத்துக்கள் உள்ளதா? என்றும் விசாரணை நடத்தி வருகிறார்கள். நெல்லையில் அ.தி.மு.க. பிரமுகரின் வீட்டில் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு