மாவட்ட செய்திகள்

சிறுபான்மையினருக்கு அ.தி.மு.க. பாதுகாப்பு அரணாக விளங்கும் - அமைச்சர் காமராஜ் உறுதி

சிறுபான்மையினருக்கு அ.தி.மு.க. பாதுகாப்பு அரணாக விளங்கும் என்று அமைச்சர் காமராஜ் உறுதி அளித்தார்.

நன்னிலம்,

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் காமராஜ் தொகுதிக்குட்பட்ட பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நன்னிலம் கடைவீதி, பஸ் நிலையம், கொல்லுமாங்குடி உள்ளிட்ட இடங்களில் அமைச்சர் இரா.காமராஜ் வாக்கு கேட்டு பிரசாரம் செய்தார். நன்னிலம் பஸ் நிலையத்தில் அமைச்சர் காமராஜ் வாக்கு சேகரித்தபோது அவருக்கு பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அப்போது அங்கு வந்த ஆட்டோ டிரைவர்கள் அமைச்சரை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். தொடர்ந்து கொல்லுமாங்குடியில் இஸ்லாமிய மக்களை சந்தித்த அமைச்சர் காமராஜ் சிறுபான்மை மக்களுக்கு அ.தி.மு.க. செய்துள்ள பணிகள் குறித்து பேசினார்.

மேலும் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அரணாக அ.தி.மு.க. விளங்கும் எனவும் உறுதியளித்தார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நன்னிலம் தொகுதி மக்கள் மீது நான் வைத்திருக்கும் அன்பும், தொகுதி மக்கள் என் மீது வைத்திருக்கும் அன்பும் என்றும் மாறாது. கடந்த 10 ஆண்டுகளாக இந்த தொகுதிக்கு கல்வி வசதியை அதிகரித்தல், பாலங்கள் அமைத்தல், சாலைகள் மேம்பாடு செய்தல் உள்ளிட்ட பணிகளை செய்து இருப்பதால் மக்கள் என் மீது அன்பு வைத்திருக்கிறார்கள். மேலும் கொரோனா நோய் தொற்று காலத்தில் மக்களோடு மக்களாக பழகி அவர்களை நோய் தாக்காமல் பாதுகாக்கும் பணியில் இருந்ததை நினைவில் வைத்திருக்கிறார்கள். என் தொகுதி மக்களை பாதுகாப்பது எனது கடமை.

இத்தொகுதிக்கு என்னால் முடிந்த அனைத்து வளர்ச்சி பணிகளையும் மேற்கொண்டு இருக்கிறேன். எதிர்காலத்தில் நவீன யுகத்துக்கான தேவைகளை உணர்ந்து அதற்கேற்ற தொழில்கள், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட கட்டமைப்புகளை மேம்படுத்துவேன். இவ்வாறு அமைச்சர் இரா.காமராஜ் கூறினார். அப்போது அ.தி.மு.க. அமைப்பு செயலாளர்கள் கோபால், ஆசைமணி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு