மாவட்ட செய்திகள்

உதயநிதி ஸ்டாலினை கண்டித்து பெரம்பலூரில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

பெண்களை தொடர்ந்து இழிவுப்படுத்தியும், முதல்-அமைச்சரை அவதூறாகவும் பேசி வருவதாக தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து பெரம்பலூர் பாலக்கரை கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகே மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

தினத்தந்தி

பெரம்பலூர்,

பெண்களை தொடர்ந்து இழிவுப்படுத்தியும், முதல்-அமைச்சரை அவதூறாகவும் பேசி வருவதாக தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து பெரம்பலூர் பாலக்கரை கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகே மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஆர்.டி.ராமச்சந்திரன் தலைமை தாங்கி கண்டனம் தரிவித்து பேசினார். ஆர்ப்பாட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. மாணவரணி செயலாளரும், பெரம்பலூர் எம்.எல்.ஏ.வுமான இளம்பை இரா.தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், உதயநிதி ஸ்டாலினை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதில் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர்கள், அ.தி.மு.க.வினர், மகளிரணியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட மகளிரணி செயலாளர் ராஜேஸ்வரி நன்றி கூறினார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது