திண்டுக்கல் நாகல்நகரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியபோது எடுத்தபடம் 
மாவட்ட செய்திகள்

200-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி அ.தி.மு.க. ஹாட்ரிக் வெற்றி பெறும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நம்பிக்கை

200-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி அ.தி.மு.க. ஹாட்ரிக் வெற்றி பெறும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நம்பிக்கை

தினத்தந்தி

திண்டுக்கல்,

தமிழகத்தில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி அ.தி.மு.க. ஹாட்ரிக் வெற்றி பெறும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.

சூறாவளி பிரசாரம்

திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி 5-வது நாளான நேற்று திண்டுக்கல் நேதாஜிநகர் புவனேஸ்வரி அம்மன் கோவில் அருகில் இருந்து தனது பிரசாரத்தை தொடங்கினார்.

இதை தொடர்ந்து பொன் சீனிவாசன் நகர், சந்தைப் பேட்டை, முனியப்பன் கோவில் தெரு, என்.வி.ஜி.பி. தியேட்டர் ரோடு, சேவியர் தெரு, செல்வகணபதி கோவில், வடக்கு சவுராஷ்டிராபுரம் ஆகிய பகுதிகளில் வீதி, வீதியாக சென்று அமைச்சர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

ஹாட்ரிக் வெற்றி

அப்போது, ஏழை மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங் களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு செயல் படுத்தியுள்ளது. அந்த திட்டங்கள் அனைத்தும் மக்கள் மனதில் பசுமரத்து ஆணி போல் பதிந்துள்ளது. எனவே நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதி களை கைப்பற்றி அ.தி.மு.க. அரசு ஹாட்ரிக் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும் செய்யாததை சொல்லாமல் செய்வதை மட்டுமே சொல்லி அ.தி.மு.க. வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடு படுகின்றனர்.

ரூ.5 ஆயிரம் நிவாரணம்

மழைக்காலங்களில் கைத் தறி நெசவு தொழி லாளர்கள் வாழ்வாதாரம் இழந்து மிகவும் பாதிக்கப் படுவார்கள். எனவே அவர்களுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணமாக வழங் கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தேர்தல் அறிக்கை யில் தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாடு பஞ்சு கொள்முதல் கழகம் உருவாக் கப்பட்டு பஞ்சு உற்பத்தி காலத்திலேயே கொள்முதல் செய்து இருப்பு வைத்து, நூல் விலை உயர்வு ஏற்படாமல் கட்டுப்படுத்தப்படும். கைத் தறி நெசவு தொழிலாளர் களின் நலனுக்காக் நல வாரியம் அமைக்கப்படும். கைத்தறி ஆடைகளுக்கு ஜி.எஸ்.டி. வரிவிலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்கப் படும் என்பன போன்ற பல் வேறு அறிவிப்புகள் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள் ளன. அவை அனைத்தும் அ.தி.மு.க. 3-வது முறையாக ஆட்சி பொறுப்பேற்றதும் நிறைவேற்றப்படும் என்றார். பிரசாரத்தின் போது, அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் மருதராஜ், கூட்டுறவு ஒன்றிய தலைவர் ராஜ்மோகன், அபிராமி கூட்டுறவு பண்டக சாலை தலைவர் பாரதி முருகன், அ.தி.மு.க. பகுதி செயலாளர்கள் சேசு, சுப்பிர மணி, மோகன், முரளி மற்றும் பா.ஜ.க., பா.ம.க., த.மா.க. உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

சிறப்பான திட்டங்கள்

முன்னதாக நேற்று முன் தினம் இரவு, திண்டுக்கல் ஒன்றிய பகுதிகளான முள்ளிப் பாடி, ம.மு.கோவிலூர், பால கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதி களில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, திண்டுக்கல் தொகுதி மக்க ளுக்கு அடிப்படை வசதிகள் அனைத்தும் முறையாக கிடைக்க நடவடிக்கை எடுத்துள்ளேன். நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வை அமோக வெற்றிபெற செய்தால் திண்டுக்கல் தொகுதியில் சிறப்பான பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப் படும் என்றார். பிரசாரத்தின் போது அ.தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜ சேகரன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

சாமி தரிசனம்

இதேபோல் நேற்று மாலை 4 மணி முதல் சீலப்பாடி ஊராட்சி என்.ஜி.ஓ.காலனி, சி.டி.ஓ. காலனி, எம்.ஜி.ஆர்.நகர், குடித்தெரு, சீலப்பாடி ஏ.டி.காலனி, அரசமரத் தெரு, வடக்கு தெரு, முள்ளிப்பாடி ஊராட்சி ஆத்துமரத்துப் பட்டி, அண்ணப்பட்டி, புளிய மரத்துப்பட்டி, முள்ளிப்பாடி, பாறையூர், ம.மு.கோவிலூர் ஊராட்சி ம.மு.கோவிலூர், வன்னிய பாறைப்பட்டி, பெரிய கோட்டை ஊராட்சி பெரிய கோட்டை, பில்லம நாயக்கன் பட்டி, கோமையன் பட்டி, கஸ்தூரி நாயக்கன் பட்டி, கோவுகவுண்டன் பட்டி, வன் னியபாறைப்பட்டி, முஸ்லிம் பாறைப்பட்டி ஆகிய பகுதிகளில் வீதி, வீதியாக சென்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வாக்கு சேகரித்தார். முள்ளிப் பாடியில் கிறிஸ்தவ ஆலயத் திற்கு சென்ற அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு கிறிஸ்தவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதே போல் பெரியகோட்டையில் உள்ள முனியப்பன் கோவிலில் அவர் சாமி தரிசனம் செய்தார். 6-வது நாளாக இன்று (வெள்ளிக்கிழமை) ஓய்.எம்.ஆர்பட்டி, கோபால் நகர், அபிராமி குப்பம், பன்றிமலை சுவாமிகள்தெரு, புதூர், மேற்கு மரியநாதபுரம், கிழக்கு மரியநாதபுரம், குள்ளனம்பட்டி பஸ் நிலையம் ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை