மாவட்ட செய்திகள்

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை, போலீசாரின் அறிக்கைக்கு நடிகை தனுஸ்ரீ தத்தா எதிர்ப்பு

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என கோர்ட்டில் போலீசார் தாக்கல் செய்த அறிக்கைக்கு நடிகை தனுஸ்ரீ தத்தா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மும்பை,

இந்தி நடிகர் நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா கடந்த ஆண்டு பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்தார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த குற்றச்சாட்டு மூலம் இந்தியாவில் மீ டூ புகார்கள் விஸ்வரூபம் எடுத்தன. தனுஸ்ரீயை தொடர்ந்து பல பிரபலங்கள் பல்வேறு நபர்கள் மீது பாலியல் புகார்களை கூறி அதிர்ச்சி கிளப்பினர்.

இந்தநிலையில் தனுஸ்ரீ தத்தா அளித்த புகாரின் பேரில் மும்பை ஒஷிவாரா போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை அறிக்கையை கடந்த மாதம் 12-ந்தேதி அந்தேரி பெருநகர மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.

அதில் தனுஸ்ரீ தத்தாவின் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்தவோ, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவோ எந்த ஆதாரமும் இல்லை என போலீசார் கூறியிருந்தனர். இதற்கு தனுஸ்ரீ தத்தா கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

அவரது சார்பில் கோர்ட்டில் ஆஜரான வக்கீல் நிதின் சத்புதே, போலீசாரின் அறிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார். பின்னர் போலீசாரின் அறிக்கையை எதிர்த்து புகாரோ அல்லது பிரமாண பத்திரமோ தாக்கல் செய்ய தனுஸ்ரீ தத்தாவுக்கு கோர்ட்டு அனுமதி அளித்து உள்ளது.

இந்த வழக்கின் அடுத்த விசாரணை செப்டம்பர் 7-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்