மாவட்ட செய்திகள்

ஆலங்காயத்தில் 34.8 மில்லி மீட்டர் மழை பதிவு

வேலூர் மாவட்டம் ஆலங்காயத்தில் 34.8 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

வேலூர்,

வேலூரில் கடந்த சில நாட்களாக பகலில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஆனால் மாலையில் பெய்யும் மழையால் மக்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர். பகலில் கொளுத்தும் வெயில், மாலையில் மழை என இருவேறு காலநிலை வேலூரில் நிலவுகிறது. நேற்றுமுன்தினம் இரவு சுமார் 8.30 மணி அளவில் பலத்த மழை பெய்தது. பின்னர் மழையின் வேகம் குறைந்தது. எனினும் இரவு 12.30 மணி வரை மழை தூறிக்கொண்டே இருந்தது. இதனால் பள்ளமான இடங்களில் தண்ணீர் தேங்கியது. நேற்று முன்தினம் காலை முதல் நேற்று காலை வரை வேலூர் மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

ஆலங்காயம் 34.8, மேலாலத்தூர் 34.6, அரக்கோணம் 25.6, ஆற்காடு 21.4, சோளிங்கர் 15, குடியாத்தம் 14, காவேரிப்பாக்கம் 9.2, வாணியம்பாடி 9, ஆம்பூர் 7.2, வேலூர் 7. மேலும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தது. இந்த மழையால் இரவில் குளிர்ந்த காற்று வீசியது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்