மாவட்ட செய்திகள்

நாகை மாவட்டத்தில் சாராயம் கடத்திய 11 பேர் கைது - 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

நாகை மாவட்டத்தில் சாராயம் கடத்திய 11 பேரை போலீசார் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டம் சிக்கல், திருவிளையாட்டம், கடலி, கிளியனூர், தென்பாதி, பழையபாளையம், கூத்தியாம்பேட்டை, சேந்தங்குடி, கழுக்கானிமுட்டம், எழுமகளுர் மற்றும் பிரிஞ்சுமுலை ஆகிய பகுதிகளில் 2 நாட்களாக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அப்போது புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியில் இருந்து சாராயம் கடத்தி வந்த நாகை பழந்தெருவை சேர்ந்த சாமிதுரை (வயது 50), பெரம்பூர் மாந்தை மெயின் சாலையை சேர்ந்த காளைசாமி (34), பாலையூர் எழுமகளுர் மேலத்தெருவை சேர்ந்த மணிவண்ணன் (30), சீர்காழி தென்பாதி திருவள்ளுவர் நகரை சேர்ந்த கணேசன் (37) உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும், அவர்களிடம் இருந்து ஆயிரத்து 275 லிட்டர் சாராயமும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு