மாவட்ட செய்திகள்

அகில இந்திய ஆக்கி போட்டி: பெங்களூரு, மும்பை அணிகள் வெற்றி

கோவில்பட்டியில் நடந்த அகில இந்திய ஆக்கி போட்டியில் மும்பை, பெங்களூரு அணிகள் வெற்றி பெற்றன.

கோவில்பட்டி,

கோவில்பட்டியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறையின் செயற்கை புல்வெளி ஆக்கி மைதானத்தில் லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான அகில இந்திய ஆக்கி போட்டி கடந்த 5ந் தேதி தொடங்கியது. 5ம் நாளான நேற்று காலையில் நடந்த போட்டியில் மும்பை போலீஸ் அணி 21 என்ற கோல் கணக்கில் புதுச்சேரி அணியை வீழ்த்தியது.

மாலையில் நடந்த முதலாவது போட்டியில் பெங்களூரு ராணுவ லெவன் அணி 40 என்ற கோல் கணக்கில் கோவில்பட்டி லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமி அணியை வீழ்த்தியது. 2வது போட்டியில் செகந்திரபாத் தெற்கு மத்திய ரெயில்வே அணி 42 என்ற கோல் கணக்கில் ஜலந்தர் இ.எம்.இ. அணியை வீழ்த்தியது.

இன்றைய ஆட்டம்


இன்று (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெறும் போட்டியில் ஒடிசா கிழக்கு கடற்கரை ரெயில்வே அணியும், புதுடெல்லி ஓ.என்.ஜி.சி. அணியும் விளையாடுகின்றன. மாலை 6.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் புதுடெல்லி மத்திய தலைமை செயலக அணியும், தமிழ்நாடு லெவன் அணியும் விளையாடுகின்றன.

இரவு 8 மணிக்கு நடைபெறும் போட்டியில் கபுர்தலா ஆர்.சி.எப். அணியும், போபால் சாய் அணியும் விளையாடுகின்றன.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு