மாவட்ட செய்திகள்

சங்ககிரி அருகே லாரி மீது ஆம்புலன்ஸ் வேன் மோதி தொழிலாளி சாவு - 5 பேர் காயம்

சங்ககிரி அருகே லாரி மீது ஆம்புலன்ஸ் வேன் மோதி தொழிலாளி இறந்தார். 5 பேர் காயம் அடைந்தனர்.

சங்ககிரி,

சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 56). தறித்தொழிலாளி. ஒரு விபத்தில் இவருக்கு கால் முறிவு ஏற்பட்டது. இதனால் சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். மேல் சிகிச்சைக்காக அவரை கோவைக்கு கொண்டு செல்ல முடிவு செய்தனர்.

அதன்படி சேலத்தில் இருந்து ஒரு ஆம்புலன்ஸ் வேனில் அவரை ஏற்றிக்கொண்டு, அவரது மனைவி மணிமேகலை (48) மற்றும் உறவினர்கள் அன்பழகன்(48), மாது (52), ரஞ்சித் (18) ஆகியோர் சென்றனர். ஆம்புலன்ஸ் வேனை சேலம் பொன்னம்மா பேட்டையை சேர்ந்த அருண் என்பவர் ஓட்டிச்சென்றார்.

ஆம்புலன்ஸ் வேன் நேற்று மாலை 5 மணி அளவில் சங்ககிரி அருகே உள்ள சின்னாகவுண்டனூர் புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது கண் இமைக்கும் நேரத்தில் முன்னால் சென்ற லாரியும், ஆம்புலன்சும் மோதிக்கொண்டது. இதில் ஆம்புலன்ஸ் வேன் நொறுங்கியது. இடிபாடுகளில் சிக்கி செல்வம் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மணிமேகலை, அன்பழகன், மாது, ரஞ்சித், டிரைவர் அருண் ஆகிய 5 பேர் காயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த சங்ககிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயம் அடைந்த 5 பேரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இறந்து போன செல்வம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சங்ககிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு