மாவட்ட செய்திகள்

வெடிமருந்து தொழிற்சாலையை நிரந்தரமாக மூடக்கோரி 3-வது நாளாக பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்

டி.முருங்கப்பட்டியில் வெடிமருந்து தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி நேற்று 3-வது நாளாக பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

உப்பிலியபுரம்,

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அருகே உள்ள டி.முருங்கப்பட்டியில் உள்ள தனியார் வெடிமருந்து தொழிற்சாலையில் நடந்த வெடிவிபத்தில் 19 தொழிலாளர்கள் உடல் சிதறி பலியானார்கள். இதனால் தொழிற்சாலையின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டு, தொழிற்சாலை மூடப்பட்டது. இந்த தொழிற்சாலை கழிவுகளால் ஏற்படும் சுகாதார கேடுகள், நிலத்தடி நீர் பாதிப்பு, ஆடு, மாடுகளுக்கு ஏற்படும் பாதிப்புகள், புறம்போக்கு நில ஆக்கிரமிப்புகள் ஆகியவை குறித்து போராட்ட குழுவினர், பொதுமக்கள் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு தொழிற்சாலையை ஆய்வு செய்து அறிக்கை அனுப்புமாறு திருச்சி மாவட்ட வருவாய் அதிகாரிக்கு உத்தரவிட்டது. அதன்படி வெடிமருந்து தொழிற்சாலைக்கு மாவட்ட வருவாய் அதிகாரி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதையடுத்து பல கட்டுப்பாடுகளையும், நிபந்தனைகளையும் விதித்து தொழிற்சாலைக்கு தடையில்லா சான்று வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து பொதுமக்கள் மீண்டும் மதுரை ஐகோர்ட்டை நாடினர். இதையடுத்து அதிகாரிகள் வழங்கிய தடையில்லா சான்றுக்கு ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்தது.

இந்நிலையில் தொடர்ந்து தொழிற்சாலையில் பணிகள் நடப்பதாகவும், அதனை தடுத்து நிறுத்தி அங்கு வேலை செய்பவர்களை கைது செய்ய வேண்டும். நிர்வாகத்தின் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும். தினம், தினம் பொதுமக்கள் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும், தொழிற் சாலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று கோரி டி.முருங்கப்பட்டியில் நேற்று 3-வது நாளாக பொதுமக் கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள்.

நேற்று நடந்த போராட்டத்தில் தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கத்தின் உப்பிலியபுரம் ஒன்றிய செயலாளர் டி.முத்துக்குமார் கலந்து கொண்டார்.பொதுமக்களின் கோரிக்கை சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தி ஒரு முடிவுக்கு கொண்டுவர எந்த அதிகாரியும் வரவில்லை. சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க ஒரு போலீசார்கூட அங்கு வரவில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நடந்த போராட்டத்தில் டி.பாதர்பேட்டை காட்டுக்கொட்டகையை சேர்ந்த காளிதாஸ்(வயது 49) கலந்து கொண்டு விட்டு இரவில் வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை அதே ஊரை சேர்ந்த, தொழிற்சாலையில் வேலை செய்து வரும் பெருமாள் மகன் முத்துக்குமார்(30) வழிமறித்து, தொழிற்சாலையை மூடச்சொல்வது குறித்து வாக்குவாதம் செய்து, அவருடைய நண்பர்கள் 6 பேருடன் சேர்ந்து காளிதாசை தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த காளிதாஸ் உடனடியாக துறையூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து உப்பிலியபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்