மாவட்ட செய்திகள்

உத்திரமேரூர் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த முதியவர் சாவு

உத்திரமேரூர் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த முதியவர் இறந்து கிடந்தார்.

காஞ்சீபுரம் மவாட்டம் உத்திரமேரூர் அடுத்த பெருநகர் நடுத்தெருவை சேர்ந்தவர் துரைசாமி (வயது 63). ஓட்டலில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி கல்பனா தனியாக பிரிந்து மானாமதியில் வசித்து வருகிறார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில் துரைசாமி ஓட்டல் வேலைக்கு வராததால் அங்கு உள்வர்கள் அவரது வீட்டுக்கு சென்று பார்த்ததாக கூறப்படுகிறது. அப்போது வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் துரைசாமி இறந்து கிடந்தார். இதுகுறித்து அவரது மனைவி கல்பனா பெருநகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

துரைசாமி மது குடிக்கும் பழக்கம் உள்ளவர். இவர் மது குடித்துவிட்டு வீட்டில் இருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர் மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சப்-இன்ஸ்பெக்டர் விஜயகாந்த் மேற்கொண்டு விசாரித்து வருகிறார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்