மாவட்ட செய்திகள்

ரெயில் நிலையங்களில் சங்கிலி, செல்போன் பறிப்பு வழக்கில் ஆந்திர வாலிபர் கைது

சென்னை பூங்கா ரெயில் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓடும் ரெயிலில் பெண் ஒருவரின் சங்கிலியை மர்ம நபர் பறித்து சென்று விட்டார். இது தொடர்பாக எழும்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

தினத்தந்தி

மேலும் செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் பயணி ஒருவரின் நகையும், மாம்பலம் ரெயில் நிலையத்தில் ரெயில் பயணிகளின் செல்போன்களையும் மர்மநபர் பறித்து சென்றது தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில், இந்த வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளியை ரெயில் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தியதில், இந்த வழக்குகளில் தொடர்புடைய நபர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சிவா (வயது 34) என்பது தெரியவந்தது. இதையடுத்து சென்னை ரெயில்வே போலீசார், அந்த வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்த 3 பவுன் நகை, 3 செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு