மாவட்ட செய்திகள்

வியாபாரி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

திண்டுக்கல்லில் நடந்த வியாபாரி கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீசா கைது செய்தனர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் எருமைக்காரத்தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 42). இவர் மாநகராட்சி அலுவலகம் அருகே வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார்.

இந்த நிலையில் கடந்த 7-ந்தேதி இரவு 8.30 மணி அளவில் மணிகண்டன் கடையில் இருந்த போது கத்தி, அரிவாளுடன் அங்கு வந்த மர்ம கும்பல் கடைக்குள் புகுந்து மணிகண்டனை சராமாரியாக வெட்டி கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பியோடியது.

இதில் பலத்த காயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, பொன்மாந்துறை புதுப்பட்டியை சேர்ந்த சுந்தரபாண்டியன் (26), பிரசன்னகுமார் (21), நல்லாம்பட்டியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (25) உள்பட 11 பேரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய நல்லாம்பட்டியை சேர்ந்த உதயகுமார் (25) என்பவர் தலைமறைவாக இருந்தார்.

அவரை போலீசார் வலைவீசி தேடி வந்த நிலையில் நேற்று அவர் திண்டுக்கல் பஸ் நிலையம் பகுதியில் சுற்றித்திரிவதாக வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விரைந்து சென்ற போலீசார் உதயகுமாரை கைது செய்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்