மாவட்ட செய்திகள்

அ.தி.மு.க. புதிய நிர்வாகிகள் நியமனம்

சிவகங்கையில் அ.தி.மு.க. மற்றும் சார்பு அணிக்கு புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தினத்தந்தி

சிவகங்கை,

சிவகங்கையில் அ.தி.மு.க. மற்றும் சார்பு அணிக்கு புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு:- சிவகங்கை வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராக வி.ஜி.பி. கருணாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.இதுபோல சிவகங்கை நகர் கழகச் செயலாளராக என்.எம்.ராஜா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் மாவட்ட எம்.ஜி.ஆர. மன்ற துணை செயலாளர்களாக ஓய்வுபெற்ற சார்பதிவாளர் ஆர்.எம். இளங்கோவன், மற்றும் அர்ஜுனன் ஆகியோரும், மாவட்ட கலைப்பிரிவு செயலாளராக செந்தில் முருகன், மாவட்ட மகளிர் அணி இணைச்செயலாளராக மஞ்சுளா பாலச்சந்தர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களை கதர் கிராம தொழில் துறை அமைச்சர் பாஸ்கரன், மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் ஆகியோர் பரிந்துரையின் பேரில் அ.தி.மு.க.ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை