மாவட்ட செய்திகள்

மனைவியுடன் தகராறு: 1 மாத பெண் குழந்தையை தவிக்க விட்டு தந்தை தற்கொலை

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் 1 மாத பெண் குழந்தையை தவிக்க விட்டு தந்தை தற்கொலை செய்து கொண்டார்.

மணவாளக்குறிச்சி,

குளச்சல் பாலப்பள்ளம் காட்டுக்கடை பகுதியை சேர்ந்தவர் ராஜூ (வயது 28). இவர் மண்டைக்காடு அருகே பருத்திவிளை பகுதியில் திருமணம், விழாக்களில் கட்டப்பட்டு வரும் ஒலிபெருக்கியை வைத்து கடை நடத்தி வரும் ஒருவரின் கடையில் வேலை பார்த்து வந்தார்.

கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு முளகுமூடு பகுதியை சேர்ந்த தினிசா ரோசி என்பவரை இவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 1 மாத பெண் குழந்தை உள்ளது. இதற்கிடையே ராஜூக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

தற்கொலை

இந்த நிலையில் சம்பவத்தன்று மீண்டும் அவர்களுக்கிடையே வாக்குவாதம் முற்றியது. இதனால் மனமுடைந்த ராஜூ, தான் வேலை பார்க்கும் கடையில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த புகாரின் அடிப்படையில் மண்டைக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் 1 மாத பெண் குழந்தையை தவிக்க விட்டு தந்தை தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்