மாவட்ட செய்திகள்

அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.80 லட்சத்துக்கு தானியங்கள் விற்பனை

அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.80 லட்சத்துக்கு தானியங்கள் விற்பனையானது.

திருக்கோவிலூர்,

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் உள்ளது. இந்த விற்பனைக்கூடத்துக்கு அரகண்டநல்லூர் மட்டுமின்றி சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது நிலத்தில் விளைந்த நெல், மக்காச்சோளம், உளுந்து உள்ளிட்ட தானியங்களை மூட்டைகளாக கட்டிக்கொண்டு வந்து கொண்டு விற்பனை செய்து விட்டு செல்வது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று 700 மூட்டை நெல், 608 மூட்டை எள், 150 மூட்டை மக்காச்சோளம் உள்ளிட்ட தானியங்கள் கொண்டு வரப்பட்டன.

இதில் நெல் அதிகபட்சமாக ரூ.1,410-க்கும், குறைந்தபட்சமாக ரூ.1,009-க்கும், மணிலா அதிகபட்சமாக ரூ.6 ஆயிரத்து 656-க்கும், குறைந்தபட்சமாக ரூ.6 ஆயிரத்து 436-க்கும், எள் அதிகபட்சமாக ரூ.7 ஆயிரத்து 821-க்கும், குறைந்தபட்சமாக ரூ.6 ஆயிரத்து 153-க்கும் விற்பனையானது. இந்த தானிய மூட்டைகளை சேலம், திருவண்ணாமலை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் கொள்முதல் செய்து சென்றனர். நேற்று ஒரு நாள் மட்டும் ரூ.80 லட்சத்துக்கு தானியங்கள் விற்பனையானதாக விற்பனைக்கூட கண்காணிப்பாளர் செல்வம் தெரிவித்தார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு