மாவட்ட செய்திகள்

குறிஞ்சிப்பாடி, வடலூரில் 2 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைது

குறிஞ்சிப்பாடி, வடலூரில் 2 ரவுடிகள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

கடலூர்,

குறிஞ்சிப்பாடி அண்ணா நகர் டாஸ்மாக் கடை எதிரில் அதே பகுதியை சேர்ந்த மாசிலாமணி பெட்டிக்கடை வைத்துள்ளார். அவரது கடையில் சமத்துவபுரம் தேவராசு மகன் ஏழுமலை (வயது 37) வேலை பார்த்து வருகிறார்.

இவர் கடந்த மாதம் 14-ந் தேதி கடையில் இருந்த போது, குறிஞ்சிப்பாடி எம்.ஆர்.கே.பி. நகர் மரியசெல்வம் மகன் தாஸ் என்கிற அந்தோணிதாஸ் (34), தீபக் என்கிற பரணி ஆகிய 2 பேரும் பணம் கேட்டு ஏழுமலையை மிரட்டினர்.

ஆனால் அவர் பணம் கொடுக்காததால் ஆத்திரமடைந்த 2 பேரும், அங்கிருந்த ஏழுமலையின் மோட்டார் சைக்கிளை சவுக்கு கட்டையால் அடித்து சேதப்படுத்தினர். கடையில் இருந்த பொருட்களையும் அடித்து உடைத்து சேதப்படுத்தினர்.

இது பற்றி ஏழுமலை குறிஞ்சிப்பாடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷியாம்சுந்தர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இதில் ரவுடியான அந்தோணிதாஸ் மீது கடலூர் முதுநகர், பண்ருட்டி ஆகிய போலீஸ் நிலையங்களில் கொலை வழக்குகள் உள்ளன. இவரின் குற்றச்செயலை கட்டுப்படுத்தும் விதமாக அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

இதையடுத்து கலெக்டர் அன்புசெல்வன் உத்தரவின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார், அந்தோணிதாசை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகலை கடலூர் மத்திய சிறையில் இருக்கும் அவரிடம் சிறை அலுவலர்கள் மூலம் போலீசார் வழங்கினர்.

இதேபோல் வடலூரில் மற்றொரு ரவுடி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இது பற்றிய விவரம் வருமாறு:-

வடலூர் நெத்தனாங்குப்பம் டாஸ்மாக் கடை அருகில் உள்ள காலி மனையில் கடந்த மாதம் 12-ந்தேதி ஆபத்தாரணபுரம் பாட்டைதெரு மணிகண்டன் மகன் அய்யப்பன் (29), மற்றும் அவரது நண்பர் பாலா உள்பட மேலும் சிலர் மது குடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த வடலூர் தண்டபாணிசெட்டிக்காலனி ராமலிங்கம் மகன் ராம் என்கிற ராம்குமார் (30), பாலாவுடன் தகராறு செய்தார். இதை அய்யப்பன் தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரமடைந்த ராம்குமார் அய்யப்பனை ஆபாசமாக பேசி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.

இது பற்றி அய்யப்பன் வடலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஷியாம்சுந்தர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராம்குமாரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

ரவுடியான இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

இதையடுத்து கலெக்டர் அன்புசெல்வன் உத்தரவின்பேரில் ராம்குமாரை வடலூர் போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகலை கடலூர் மத்திய சிறையில் இருக்கும் அவரிடம் சிறை அலுவலர்கள் மூலம் போலீசார் வழங்கினர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்