மாவட்ட செய்திகள்

நீலாங்கரை பள்ளியில் ஆசிரியர் தூக்குபோட்டு தற்கொலை மாணவர்கள் அதிர்ச்சி

நீலாங்கரையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அறிந்த மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த நீலாங்கரை கிழக்குகடற்கரை சாலை அருகே உள்ள பாண்டியன் சாலையில் தனியார் மெட்ரிகுலேசன் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் குமரி மாவட்டத்தை சேர்ந்த ஆண்டனி ஜெனிபர் (வயது 27) என்பவர் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.

பள்ளியில் உள்ள விடுதியில் தங்கி வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை வகுப்பறைக்கு ஆசிரியர் ஆண்டனி ஜெனிபர் வரவில்லை.

சந்தேகம் அடைந்த மாணவர்கள் மற்றும் சக ஆசிரியர்கள் பள்ளி வளாகத்தில் உள்ள ஆசிரியர்கள் ஓய்வு எடுக்கும் அறைக்கு சென்று பார்த்தனர். அப்போது அங்குள்ள மின்விசிறியில் ஆசிரியர் ஆண்டனி ஜெனிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டு இருந்ததை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

தகவல் அறிந்ததும் நீலாங் கரை போலீசார் விரைந்து வந்து, உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, ஆசிரியர் ஆண்டனி ஜெனிபர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்