மாவட்ட செய்திகள்

சதானந்தபுரம் ஏரியில் முதலைகள்; பொதுமக்கள் பீதி

தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் அருகே உள்ள சதானந்தபுரம் ஏரியில் பல வருடங்களாக முதலைகள் வசித்து வருகின்றன.

தாம்பரம்,

சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் அருகே உள்ள சதானந்தபுரம் ஏரியில் பல வருடங்களாக முதலைகள் வசித்து வருகின்றன. இதுபற்றி அப்பகுதி பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் இதுவரையிலும் ஏரியில் உள்ள முதலைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பிடிக்காமல் இருந்து வருகின்றனர்.

இந்தநிலையில் முதலைகள் வழக்கம்போல் ஏரியின் நடுவே உள்ள திட்டு பகுதியில் மதிய நேரத்தில் வந்து உறங்குகிறது. மேலும் இரவு நேரங்களில் ஏரியின் அருகே உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்து அங்கு வீடுகளில் உள்ள கால்நடைகளை வேட்டையாடி செல்கிறது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர். இரவு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வரவே அச்சப்படுகின்றனர்.

உயிர் பலி ஏற்படாமல் தடுக்கும் வகையில் சதானந்தபுரம் ஏரியில் உள்ள முதலைகளை உடனடியாக பிடித்து அங்கிருந்து அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு