மாவட்ட செய்திகள்

மும்பை ஆஸ்பத்திரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் தூக்குப்போட்டு சாவு

மும்பையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் ஆஸ்பத்திரியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மும்பை,

மும்பை ஒர்லி, ஜிஜாமாதா நகரில் 29 வயது பெண் வசித்து வந்தார். இவருக்கு கடந்த சில நாட்களுக்குமுன்கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.இதையடுத்துஅவர் மும்பை நாயர் ஆஸ்பத்திரியில் 25-வது வார்டில்அனுமதிக்கப்பட்டுசிகிச்சை பெற்று வந்தார்.

இந்தநிலையில் பெண் நேற்று அதிகாலை 3.45 மணியளவில் ஆஸ்பத்திரி குளியல் அறைக்கு சென்றார். ஆனால் வெகுநேரமாகியும்அவர்வெளியே வரவில்லை. ஆஸ்பத்திரி ஊழியர் கதவை தட்டியும் பெண்ணிடம் இருந்துஎந்தபதிலும்வரவில்லை.

இதையடுத்து ஊழியர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது பெண் துப்பட்டாவில் தூக்கில்பிணமாகதொங்கிக்கொண்டு இருந்தார். இதையடுத்து நடந்தவிசாரணையில், அவர் தற்கொலை செய்து கொண்டதுதெரியவந்தது.

ஆஸ்துமா பிரச்சினை

தற்கொலை செய்துகொண்ட கொரோனா பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆஸ்துமா பிரச்சினையும் இருந்து உள்ளது. இந்த சம்பவம் குறித்து அக்ரிபாடா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் ஆஸ்பத்திரியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்