திருப்பூர்,
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில தலைவராகவும், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் மாநில தலைவராகவும், ஜாக்டோ-ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு வரும் சுப்பிரமணியன் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை அரசு ஊழியர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கி பேசினார்.
மாவட்ட செயலாளர் அம்சராஜ் விளக்கவுரையாற்றினார். மாநில துணைத்தலைவர் சுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார். இதில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் குணசேகரன், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பாக்கியம், நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்க மாநில தலைவர் பாலு உள்பட பலர் கலந்துகொண்டு வாழ்த்தி பேசினர்.
இதில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். முடிவில் அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் சீனிவாசன் நன்றி கூறினார்.