நாகர்கோவில்,
குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
கல்குளம் தாலுகா தக்கலை அழகியமண்டபத்தில் மெர்வின் பைனான்ஸ் பப்ளிக் லிமிடெட் என்ற பெயரில் செயல்பட்டு வந்த தனியார் நிதி நிறுவனம் பொது மக்களிடம் இருந்து முதலீடுகளை பெற்று திரும்ப வழங்கவில்லை. இதுதொடர்பாக அந்த நிதி நிறுவனத்தின் உரிமையாளருக்கு தக்கலை மற்றும் திருவிதாங்கோட்டில் உள்ள அசையா சொத்துக்களை வருகிற 15ந் தேதி காலை 10.30 மணிக்கு பொதுஏலம் விடப்படுகிறது.
இந்த ஏலம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் வருவாய் கூட்ட அரங்கில் நடைபெறும். சொத்துக்களின் விவரம் மற்றும் ஏலத்தில் கலந்து கொள்வதற்கான நிபந்தனைகள், விண்ணப்பபடிவம் ஆகியவை அனைத்து தாசில்தார் அலுவலகங்கள் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் பெற்று தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.