இதில் மன உளைச்சலில் இருந்து வந்த அவர் வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார். சீனிவாசனை குடும்பத்தினர் தேடிவந்த நிலையில் காஞ்சீபுரம் அருகே பிச்சாவாடி பாலாற்று படுகையில் விஷம் குடித்து உயிரிழந்துள்ளார். இதுகுறித்து பாலுசெட்டி சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், போலீசார் அங்கு விரைந்து சென்று சீனிவாசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.