திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த பாண்டூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெய்சிங். இவரது மகன் சுதீஷ் பெல்சா (வயது 22). இவர் திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் கடந்த 4 வருடங்களாக ஆட்டோ ஓட்டி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சுதீஷ் பெல்சாவின் தாய், தந்தை மற்றும் சகோதரர்கள் வேலையின் காரணமாக வெளியே சென்றனர்.
அப்போது வீட்டில் தனியாக இருந்த அவர் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது பற்றி அவரது தந்தை ஜெய்சிங் திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து சுதீஷ் பெல்சாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.