மாவட்ட செய்திகள்

குடும்பத்தகராறில் 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து ஆட்டோ டிரைவர் தற்கொலை

குடும்பத்தகராறு காரணமாக 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

குடும்பத்தகராறு

சென்னை புதுப்பேட்டை பச்சையப்ப முதலி தெருவை சேர்ந்தவர் ஞானவேல் (வயது 44). ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி ஜெயந்தி (38). இவர்களுடைய மகள்கள் ஐஸ்வர்யா (5), பூஜா (3). கடந்த 15-ந் தேதி இரவு கணவன்-மனைவி இருவரும் வாய்த்தகராறில் ஈடுபட்டனர்.

இதனால் மனமுடைந்த ஞானவேல், தனது மகள்கள் ஐஸ்வர்யா, பூஜா இருவரையும் தனது ஆட்டோவில் ஏற்றி கொண்டு வெளியே சென்றவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் பயந்துபோன ஜெயந்தி தனது கணவர், 2 மகள்களும் காணவில்லை என்று எழும்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் 2 பெண் குழந்தைகள், ஆட்டோ டிரைவரை காணவில்லை என்று வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் தேடி வந்தனர்.

2 குழந்தைகளுடன் தற்கொலை

இந்த நிலையில் நேற்று காலை மறைமலைநகர் அருகே கடம்பூர் விஜிலென்ஸ் நகர் வீட்டுமனை பிரிவிலுள்ள தண்ணீர் நிரம்பிய பெரிய தரைமட்ட கிணற்றில் 2 பெண் குழந்தைகள், ஒரு ஆண் நபர் இறந்து கிடப்பதாக மறைமலைநகர் போலீசாருக்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு சென்ற மறைமலைநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார், கிணற்றில் குழந்தைகளை அணைத்தபடி ஆண்நபர் இறந்து கிடப்பது தெரியவந்தது. போலீசார் 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கிணற்றில் குதிப்பதற்கு முன்னால் 2 குழந்தைகளையும் துணியால் தன்னுடன் கட்டிக்கொண்டு குழந்தைகளை அணைத்தபடி கிணற்றில் குதித்துள்ளார். அந்த கிணற்றின் அருகே ஞானவேலின் ஆட்டோ நின்று கொண்டிருந்தது. அதனை போலீசார் சோதனை செய்தபோது குழந்தைகளுக்கு பிஸ்கெட், மிக்சர் போன்றவற்றை வாங்கி கொடுத்து விட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.

இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது இறந்த நபர் கடந்த 15-ந்தேதி தனது மனைவியுடன் கோபித்துக் கொண்டு காணாமல் போன சென்னை புதுப்பேட்டையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஞானவேல், அவருடைய மகள்கள் ஐஸ்வர்யா, பூஜா என்பது தெரியவந்தது.

ஆட்டோ டிரைவர் ஒருவர் தனது 2 மகள்களுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடம்பூர் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது