மாவட்ட செய்திகள்

ஆட்டோ டிரைவர் கொலை வழக்கு: டிப்ளமோ என்ஜினீயர் கைது

ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில், டிப்ளமோ என்ஜினீயர் கைது செய்யப்பட்டார். மேலும் முக்கிய குற்றவாளியை போலீசார் தேடிவருகின்றனர்.

தினத்தந்தி

சாத்தான்குளம்,

சாத்தான்குளம் அருகே ஆட்டோ டிரைவர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் நேற்று டிப்ளமோ என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளியை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

சாத்தான்குளம் அருகே வீர இடக்குடி தெருவைச் சேர்ந்தவர் மூக்காண்டி மகன் மணிகண்டன் (வயது 38). ஆட்டோ டிரைவரான இவரை கடந்த மாதம் 30-ந்தேதி இரவில் சிலர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர். இதுகுறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், தசரா திருவிழா வரவு செலவு கணக்குகளை கேட்டது தொடர்பாக, சிலரால் மணிகண்டன் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

இந்த கொலை வழக்கு தொடர்பாக, ஏற்கனவே அதே பகுதியைச் சேர்ந்த செல்லப்பா, இசக்கிமுத்து, கிங்ஸ்டன் ஜெயசிங் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். போலீசார் தொடர் விசாரணையில் மணிகண்டன் கொலை வழக்கில் சாத்தான்குளம் மாணிக்கவாசகபுரத்தைச் சேர்ந்த ராஜா மகன் சுதர்சன் வினோத் என்ற சாம் (19) என்பவருக்கும் தொடர்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதை தொடர்ந்து அவரை போலீசார் நேற்று கைது செய்தனர். டிப்ளமோ என்ஜினீயரான இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்தார்.

இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான சாத்தான்குளம்-தட்டார்மடம் ரோடு ரஸ்தா தெருவைச் சேர்ந்த மந்திரம் மகன் ஆட்டோ டிரைவரான மற்றொரு மணிகண்டனை (26) போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை