மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் சாவு

தக்கலை அருகே பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பரிதாபமாக இறந்தார்.

பத்மநாபபுரம்,

தக்கலை அருகே பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ஆட்டோ கவிழ்ந்தது

மார்த்தாண்டம் அருகே உள்ள இரவிபுதூர்கடையை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 46), ஆட்டோ டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு தனது ஆட்டோவில் தக்கலையில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, மழை பெய்து கொண்டிருந்தது. தக்கலை அருகே உள்ள புலிபனம் பகுதியை கடந்து சென்றபோது, பின்னால் வந்த வாகனங்களுக்கு வழிவிட முயன்றார்.

அப்போது, திடீரென ஆட்டோ சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

டிரைவர் சாவு

இதில் மணிகண்டன் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். அவரை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தக்கலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் மணிகண்டனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இறந்த மணிகண்டனுக்கு ஷாலினிமோள் (42) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்