அப்போது திருவள்ளூர் பஸ் நிலையத்தில் உள்ள சுவர்கள் அனைத்தையும் தூய்மைப்படுத்தி வர்ணம் தீட்டி அழகிய விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்பட்டது. இந்நிகழ்ச்சியை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வர்ணம் தீட்டி பணியை துவக்கி வைத்தார்.
அவருடன் திருவள்ளூர் நகர்மன்ற தலைவர் உதயமலர் பொன்.பாண்டியன், தொண்டு நிறுவன இயக்குனர் ஏஞ்சலின் பிரின்ஸ் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.