மாவட்ட செய்திகள்

வாக்களிப்பதன் அவசியம் குறித்து குறும்படம் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

வாக்களிப்பதன் அவசியம் குறித்து குறும்படம் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

தினத்தந்தி

ஊட்டி,

வாக்களிப்பதன் அவசியம் குறித்து குறும்படம் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 868 வாக்குச்சாவடிகள் உள்ளன. கடந்த தேர்தலில் ஊட்டி உள்பட 3 சட்டமன்ற தொகுதிகளிலும் 35-க்கும் மேற் பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்குகள் குறைவாக பதிவானது.

இதை கருத்தில் கொண்டு வருகிற சட்டமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி குறைவான வாக்குப்பதிவான வாக்குச்சாவடிக்கு உட்பட்ட பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் மாற்றுத்திறனாளிகள் தபால் ஓட்டு போடுவதற்காக படிவங்களும் வழங்கப்பட்டு வருகிறது. வாக்களிப்பதன் அவசியம் குறித்து ஊட்டி மத்திய பஸ் நிலையம் முன்பு நேரு யுவகேந்திரா மூலம் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்களில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கறை நல்லது என்ற விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு உள்ளது.

அதுபோன்று வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக வாக்குச்சாவடி களில் இருந்து தொலைதூரத்தில் வசிப்பவர்கள், வனப்பகுதிகளை ஒட்டி இருப்பவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் செயல்பாடு, அளித்த வாக்கை உறுதி செய்யும் எந்திரங்களில் ஓட்டு போடுவது பொது இடங்களில் வாக்காளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் அதிநவீன திரை கொண்ட வாகனத்தில் விழிப்புணர்வு குறும்படம் மூலம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது