மாவட்ட செய்திகள்

பக்ரீத் பண்டிகை: வீடுகளில் தொழுகை நடத்திய முஸ்லிம்கள்

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, முஸ்லிம்கள் தங்களது வீடுகளிலேயே தொழுகை நடத்தினர்.

ஆறுமுகநேரி,

பக்ரீத் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளதால், முஸ்லிம்கள் பள்ளிவாசல்கள், மைதானங்கள், கடற்கரை உள்ளிட்ட இடங்களில் தொழுகை நடத்த அனுமதிக்கப்படவில்லை.

இதையொட்டி காயல்பட்டினத்தில் முஸ்லிம்கள் தங்களது வீடுகளிலேயே சிறப்பு தொழுகை நடத்தினர். பெரும்பாலானவர்கள் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் தொழுகையில் பங்கேற்றனர். பின்னர் ஏழைகளுக்கு இறைச்சி, அரிசி போன்றவற்றை வழங்கினர்.

இதேபோன்று தூத்துக்குடி, உடன்குடி, கேம்பலாபாத், ஆறாம்பண்ணை, செய்துங்கநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் முஸ்லிம்கள் தங்களது வீடுகளிலேயே பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடத்தினர்.

தொழுகை முடிந்ததும், ஒருவருக்கு ஒருவர் பக்ரீத் பண்டிகை வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். பின்னர் ஏழைகளுக்கு உதவிகளை வழங்கினர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு