மாவட்ட செய்திகள்

மதுபான விடுதி, ஓட்டல்களில் வயது குறைந்தவர்கள் மது குடிப்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்

மதுபான விடுதி, ஓட்டல்களில் வயது குறைந்தவர்கள் மதுகுடிப்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் 25 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மதுபான விடுதி மற்றும் ஓட்டல்களில் மது வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தடையை மதுபான விடுதிகள் பின்பற்றுவதில்லை. இதுகுறித்து மும்பை ஐகோர்ட்டில் பொது நலன் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில் மதுபான விடுதி, ஓட்டல்களில் 25 வயதுக்குட்பட்டவர்கள் மதுகுடிப்பதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு மாநில அரசு, மும்பை மாநகராட்சிக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

மேலும் வயது குறைந்தவர்கள் மதுபான விடுதி, ஓட்டல்களில் மது குடிப்பதை தடுக்க என்ன செய்யலாம் என்ற பரிந்துரைகளை மனுதாரர்களிடமே கேட்டுள்ளது.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு