மாவட்ட செய்திகள்

தேர்வில் தோல்வி அடைந்ததால் பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை

நெல்லை அருகே தேர்வில் தோல்வி அடைந்ததால் பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

பேட்டை,

நெல்லை அருகே உள்ள சுத்தமல்லி ராஜீவ்காந்தி நகர் பாரதியார் தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மகள் செண்பகவல்லி (வயது 18). இவர் அங்குள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து தேர்வு எழுதி இருந்தார்.

இந்த நிலையில் கடந்த 19-ந்தேதி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் செண்பகவல்லி தோல்வி அடைந்தார்.

இதனால் விரக்தி அடைந்த செண்பகவல்லி சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று செண்பகவல்லி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு