மாவட்ட செய்திகள்

குடிப்பதற்கு பணம் தரமறுத்ததால் ஆத்திரம் மனைவிக்கு கத்திக்குத்து

குடிப்பதற்கு பணம்தர மறுத்ததால் ஆத்திரத்தில்மனைவியை கத்தியால்குத்திவிட்டு தப்பிஓடியகணவரை போலீசார்தேடி வருகின்றனர்.

தினத்தந்தி

திரு.வி.க.நகர்,

சென்னை பாடிகலைவாணர்காலனியைச் சேர்ந்தவர் கண்ணாத்தாள்(வயது 45). இவர்,தனியார் பெண்கள்விடுதியில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய கணவர் பாக்யநாதன், சரிவரவேலைக்கு செல்லாமல்தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தகராறு செய்து வந்தார்.

நேற்றுகாலை பாக்யநாதன், கண்ணாத்தாள்வேலை செய்யும்விடுதிக்கு சென்றுகுடிப்பதற்கு பணம்கேட்டு அவருடன் தகராறு செய்தார். ஆனால் கண்ணாத்தாள் பணம் தர மறுத்துவிட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த பாக்யநாதன், தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால்மனைவி கண்ணாத்தாளைசரமாரியாக குத்திவிட்டு தப்பிஓடிவிட்டார். இதில் தலை, மார்பு,இடுப்பு பகுதியில்பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

சம்பவம் குறித்துஜெ.ஜெ.நகர்போலீசார்வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடியபாக்யநாதனை தேடிவருகின்றனர்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்