மாவட்ட செய்திகள்

தாலுகா அலுவலகம் முன்பு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தரங்கம்பாடி தாலுகா அலுவலகம் முன்பு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பொறையாறு,

நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தரங்கம்பாடி வடக்கிளை தலைவர் வலம்புரிநாதன் தலைமை தாங்கினார்.

வட்டச்செயலாளர் அசோக்குமார் வரவேற்று பேசினார். மாவட்ட பொருளாளர் வீரமணி பேசினார். அதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், புதிய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது. மீண்டும் பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும். கிராம உதவியாளர்களுக்கு பணி உயர்வு வழங்குவது 10 ஆண்டுகளுக்கு பின் என்பதை 6 ஆண்டுகளாக குறைக்க வேண்டும்.

பதவி உயர்வு 20 விழுக்காடு என்பதை 30 விழுக்காடுகளாக உயர்த்த வேண்டும். ஒரு மாத கால ஊதியத்தை பொங்கல் போனசாக வழங்க வேண்டும். ஜமாபந்தி நிகழ்ச்சிக்கு படி வழங்க வேண்டும். வறட்சி, வெள்ளக்காலங்களில் கணக்கெடுப்பு பணிக்காக செல்லும் ஊழியர்களுக்கு சிறப்பு படி வழங்க வேண்டும். காலியாக உள்ள கிராம உதவியாளர்கள் பணியை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஓய்வு பெற்ற கிராம உதவியாளர்கள் கிருபைமணி, குணசேகரன் உள்ளிட்ட தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் கலந்து கொண்டனர். முடிவில் சங்கத்தின் வட்ட பொருளாளர் சுந்தரராஜன் நன்றி கூறினார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு