மாவட்ட செய்திகள்

காதலர் தின பரிசாக புதுச்சேரி பாரதி பூங்கா மீண்டும் திறப்பு

ஒரு மாதத்துக்கும் மேலாக மூடப்பட்டிருந்த பாரதி பூங்கா மீண்டும் திறக்கப்பட்டது. இது காதலர் தின பரிசாக கருதப்படுகிறது.

தினத்தந்தி

144 தடை உத்தரவு

கவர்னர் கிரண்பெடிக்கு எதிராக காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் கடந்த மாதம் தொடர் போராட்டங்களை அறிவித்தனர். இதையொட்டி தலைமை செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள், கவர்னர் மாளிகை பகுதியில் போராட்டங்கள் நடத்த தடை விதித்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு நடவடிக்கையாக கவர்னர் மாளிகையை சுற்றிலும் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டன. துணை ராணுவப் படை யினர் வரவழைக்கப்பட்டு கவர்னர் மாளிகையை சுற்றிலும் குவிக்கப்பட்டனர். பொது இடங்களில் மக்கள் கூட அனுமதி மறுக்கப்பட்டது.

பாரதி பூங்கா மூடல்

இதன் காரணமாக கவர்னர் மாளிகை மற்றும் சட்டசபை அருகே உள்ள பாரதி பூங்கா கடந்த (ஜனவரி) மாதம் 6-ந்தேதி மூடப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளும், உள்ளூர் பொதுமக்களும் பூங்காவுக்கு செல்ல முடியாமல் ஏமாற்றமடைந்தனர். வழக்கமாக பாரதி பூங்காவில் நடைப்பயிற்சி செல்வோரும், பொழுதுபோக்கிற்காக வருவோரும், கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இந்தநிலையில் படிப்படியாக தற்போது புதுவையில் இயல்பு நிலை திரும்பியது. எனவே பாரதி பூங்காவினை திறக்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் மத்தியில் எழுந்தது.

மீண்டும் திறப்பு

இதைத்தொடர்ந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நேற்று முதல் பாரதி பூங்கா திறந்து விடப்பட்டது. முதல் நாளான நேற்றே ஏராளமான சுற்றுலா பயணிகள் பூங்காவிற்கு வந்தனர்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) காதலர் தினம் என்பதால் இந்த நாளை கொண்டாட பாரதி பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள் மற்றும் காதலர்கள் அதிக அளவில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில் காதலர் தினத்தை கொண்டாட ஏராளமான சுற்றுலா பயணிகள், காதலர்கள் புதுவையில் குவிந்துள்ளனர். நேற்றே கடற்கரை, பாரதி பூங்கா மற்றும் ஒயிட் டவுண் பகுதிகளில் அவர் களின் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டது. இந்த நிலையில் பாரதி பூங்கா திறக்கப்பட்டு இருப்பது காதலர் தின பரிசாக கருதுவதாக காதலர்கள் தெரிவித்தனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு