மாவட்ட செய்திகள்

பிறந்த நாளையொட்டி அண்ணா சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவிப்பு

அண்ணா பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தஞ்சாவூர்,

அண்ணா பிறந்தநாளையொட்டி தஞ்சை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தஞ்சை சிவகங்கை பூங்கா அருகில் இருந்து ஊர்வலம் புறப்பட்டது. இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலையை வந்தடைந்தது. பின்னர் பரசுராமன் எம்.பி. தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

இதில் முன்னாள் தொகுதி செயலாளர் துரை.திருஞானம், மாவட்ட மாணவரணி செயலாளர் காந்தி, மாநகராட்சி முன்னாள் மேயர் சாவித்திரி கோபால், மாவட்ட மகளிரணி செயலாளர் அமுதா ரவிச்சந்திரன், பகுதி செயலாளர்கள் அறிவுடைநம்பி, சரவணன், புண்ணியமூர்த்தி, ரமேஷ், முன்னாள் நகர செயலாளர் பண்டரிநாதன், ஒன்றிய செயலாளர் துரை.வீரணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தஞ்சை மாநகர தி.மு.க. சார்பில் அண்ணா சிலைக்கு தெற்கு மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், முன்னாள் அமைச்சர் உபயதுல்லா, முன்னாள் நகரசபை தலைவர் இறைவன் உள்பட நிர்வாகிகள் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். முன்னதாக தஞ்சை கீழவாசலில் உள்ள காமராஜர் சிலை அருகில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக அண்ணாசிலையை வந்தடைந்தது.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அண்ணா சிலைக்கு மாநில பொருளாளர் ரெங்கசாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தெற்கு மாவட்ட செயலாளர் சேகர், மாநகர மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

திராவிடர் கழகம் சார்பில் அண்ணா சிலைக்கு மாவட்ட தலைவர் அமர்சிங் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு