மாவட்ட செய்திகள்

நெல்லையில் பிறந்தநாள் விழா: வ.உ.சிதம்பரனார் சிலைக்கு அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

நெல்லையில் வ.உ.சிதம்பரனாரின் சிலைக்கு அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தினத்தந்தி

நெல்லை,

சுதந்திர போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 149-வது பிறந்த நாள் விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி நெல்லை பொருட்காட்சி திடலில் உள்ள வ.உ.சிதம்பரனார் மணிமண்டபத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு அனைத்து கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

தமிழக அரசு சார்பில், நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தலைமையில், வ.உ.சிதம்பரனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. உதவி கலெக்டர் சிவ கிருஷ்ணமூர்த்தி, தாசில்தார் பாலமுருகன், நெல்லை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில், தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்(பொறு ப்பு) மகாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில், வ.உ.சிதம்பரனார் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார். அமைச்சர் ராஜலட்சுமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ரெட்டியார்பட்டி நாராயணன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், மாநில அமைப்பு செயலாளர்கள் சுதா பரமசிவன், ஏ.கே.சீனிவாசன், மாவட்ட அவை தலைவர் பரணி சங்கரலிங்கம், கல்லூர் வேலாயுதம், பாளையங்கோட்டை ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் முத்துக்குட்டி பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பாரதீய ஜனதா கட்சியினர் மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில், வ.உ.சிதம்பரனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். மாவட்ட தலைவர் மகாராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் தலைமையில் காங்கிரசார் வ.உ.சிதம்பரனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ் மாநில காங்கிரசார் மாவட்ட தலைவர் சுத்தமல்லி முருகேசன் தலைமையில், வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் வர்த்தக அணி மாவட்ட தலைவர் சக்சஸ் புன்னகை உள்பட பலர் கலந்து கொண்டனர். தி.மு.க. வினர் விவசாய அணி மாவட்ட அமைப் பாளர் பொன்னையா பாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். தே.மு.தி.க. வினர் மாவட்ட செயலாளர் முகமது அலி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மாவட்ட செயலாளர் பரமசிவ அய்யப்பன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். லட்சிய தி.மு.க.வினர் மாநில கொள்கை பரப்பு செயலாளர் கவுரி சங்கரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

இந்து மக்கள் கட்சியினர் மாவட்ட தலைவர் உடையார் தலைமையிலும், அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் தேசிய மாணவர் அமைப்பினர் மாநில இணை செயலாளர் விக்னேஷ் தலைமையிலும், தமிழர் விடுதலை கொற்றத்தினர் தலைவர் வியனரசு தலைமையிலும் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் மாநில துணை பொதுச்செயலாளர் நெல்லையப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கத்தினர் தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையிலும், தமிழ்நாடு சைவ வேளாளர் சங்கத்தினர் மாவட்ட தலைவர் புளியரை ராஜா தலைமையிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

வ.உ.சி.யின் பேரனும், ஓய்வுபெற்ற தொழிலாளர் நலத்துறை அதிகாரியுமான வெள்ளைசாமி, வ.உ.சி.யின் கொள்ளுப்பேத்தியான செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஆறுமுகசெல்வி மற்றும் குடும்பத்தினரும் வ.உ.சிதம்பரனாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

இதேபோல் பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் உள்ள வ.உ.சி. சிலைக்கு தி.மு.க.வினர் மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். ஏ.எல்.எஸ்.லட்சுமணன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்