மாவட்ட செய்திகள்

கர்நாடகத்தில் பா.ஜ.க. ஆட்சியை பிடிக்கும் - சுப்பிரமணியசாமி நம்பிக்கை

கர்நாடகத்தில் பா.ஜ.க. ஆட்சியை பிடிக்கும் என்று, அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிர மணியசாமி கூறினார்.

மதுரை,

வெளிமாநிலத்தில் இருந்து வரும் பா.ஜ.க.வினரை வரவேற்று உபசரிக்கும் இடமாகத்தான் தமிழகம் உள்ளது. எந்த விஷயத்திற்காகவும் ஆர்ப்பாட்டமோ, போராட்டமோ தமிழகத்தில் பா.ஜ.க. நடத்துவது கிடையாது. இதனால் தான் தமிழகத்தில் பா.ஜ.க. பலம் பெறவில்லை. கர்நாடகத் தேர்தலில், 115 முதல் 130 தொகுதிகளில் வெற்றி பெற்று, தனி மெஜாரிட்டியுடன் பா.ஜ.க. ஆட்சியை பிடிக்கும்.

ராகுல்காந்தி இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர். அவர் பிறரை ஏமாற்றி வருகிறார். அவர் ஏற்கனவே பெயிலில் இருக்கிறார். தனது படிப்பிலும் பல பாடங்களில் பெயில் ஆனவர். அவருக்கு ஒன்றும் தெரியாது.

ரஜினி எனக்கு நண்பர் இல்லை. அவர் குருமூர்த்தி போன்றவர்கள் எழுதிக்கொடுப்பதை படிப்பவர். பொதுவாகவே நடிகர்கள் எழுதிக் கொடுப்பதை ஒப்பிப்பவர்கள் சுயமாக சிந்திக்க முடியாது.

தமிழக அரசியல்வாதிகள் காவிரித்தண்ணீர் வருவதை விரும்பாதவர்கள். அவர்கள் தண்ணீரை வணிகம் செய்யும் முதலாளிகளோடு கைகோர்த்துக் கொண்டு காவிரி நீர் தேவையில்லை என நினைப்பவர்கள். கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்தினாலே தமிழகத்தின் தண்ணீர் தேவை பூர்த்தியாகிவிடும். தமிழக அரசியல்வாதிகள் எந்த ஒரு திட்டத்திற்கும் மத்திய அரசை வலியுறுத்திப் பெறுவது கிடையாது.

நீட் தேர்வு விஷயத்தில் என்னை யாரும் எதற்கும் தொடர்பு கொள்ளவில்லை.

பாகிஸ்தான் உதவியோடு பா.ஜ.க.வை தோற்கடித்து காங்கிரஸ் ஆட்சிக்கு வர முயல்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்