மாவட்ட செய்திகள்

கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா தீவிர முயற்சி - துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் குற்றச்சாட்டு

கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் குற்றம்சாட்டினார்.

பெங்களூரு,

துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் நேற்று ஜமகண்டியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

திப்பு ஜெயந்தி விழாவை திட்டமிட்டப்படி அரசு நடத்தும். பா.ஜனதா இதற்கு தேவை இல்லாமல் எதிர்ப்பு தெரிவிக்கிறது. பா.ஜனதாவின் எதிர்ப்புக்கு நாங்கள் பணிய மாட்டோம். நாங்கள் மதசார்பற்ற மனநிலையை கொண்டவர்கள். அதனால் அனைத்து மகான்களின் ஜெயந்தி விழாவும் நடத்துவோம். முதல்-மந்திரி ஆகிவிடலாம் என்று எடியூரப்பா பகல் கனவு காண்கிறார். அவரது கனவு எக்காரணம் கொண்டும் நிறைவேறாது. காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால் பா.ஜனதாவின் இந்த முயற்சி நிறைவேறாது. மாநிலத்தின் வளர்ச்சியில் கூட்டணி அரசு கவனம் செலுத்தி வருகிறது.

காங்கிரசுக்கு அதிர்ச்சி கொடுப்பதாக எடியூரப்பா கூறி இருக்கிறார். யாருக்கு யார் அதிர்ச்சி கொடுக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பாருங்கள். பல்லாரியில் உக்ரப்பாவை வேட்பாளராக நிறுத்தி இருக்கிறோம். தீவிரமான ஆலோசனைக்கு பிறகே உக்ரப்பாவை வேட்பாளராக அறிவித்தோம். அவர் வெற்றி பெறுவார். தொகுதி அளவில் உள்ள கருத்து வேறுபாடுகளை பொறுப்பாளர்கள் சரிசெய்வார்கள்.

இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு