மாவட்ட செய்திகள்

2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி பகுதிகளில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து தங்க நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் ஊரப்பாக்கம் அய்யஞ்சேரி கணேஷ் நகர் பகுதியை சேர்ந்தவர் கருணாகரன் (வயது 48). இவர் கடந்த 27-ந் தேதி வீட்டை பூட்டிக்கொண்டு வெளியூர் சென்றவர் பின்னர் நேற்று முன்தினம் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 11 கிராம் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள், ரூ.1000 ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் கூடுவாஞ்சேரி மகாலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் மணவாளன் (67). இவர் கடந்த 26-ந் தேதி வீட்டை பூட்டிக்கொண்டு மதுரைக்கு சென்று இருந்தார். நேற்று முன்தினம் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 2 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி குத்துவிளக்கு, ரூ.8,500 ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது.

இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்