மாவட்ட செய்திகள்

கும்மிடிப்பூண்டியில் கடையின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் மின்சார வயர்கள் திருட்டு

கும்மிடிப்பூண்டியில் கடையின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் மின்சார வயர்கள் திருடப்பட்டது.

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டி பஜாரையொட்டி உள்ள சாமிரெட்டி கண்டிகை பகுதியில் வாடகை கட்டிடத்தில் எலெக்ட்ரிக்கல் மற்றும் இரும்பு கடை நடத்தி வருபவர் மனாராம் (வயது 27). இவரது வீடு கடையின் பின்புறம் உள்ளது. நேற்று காலை வழக்கம் போல கடையை திறக்க மனாராம் சென்றார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

கடையின் உள்ளே சென்று பார்த்தபோது மர்மநபர்கள் அங்கு இருந்த கல்லாப்பெட்டியை உடைத்து அதில் இருந்த ரூ.47 ஆயிரம் மற்றும் ரூ.2 லட்சம் மதிப்புள்ள மின்சார வயர்களை திருடி சென்றிருப்பது தெரியவந்தது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கைரேகை நிபுணர்கள் மர்மநபர்களின் கைரேகைகளை சேகரித்தனர். இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்