தூத்துக்குடி:
தூத்துக்குடி கே.டி.சி.நகரை சேர்ந்தவர் ராஜரத்தினம் (வயது 39). இவர் கடந்த 15-ந் தேதி குடும்பத்துடன், தனது சொந்த ஊரான கொம்பாடி தளவாய்புரத்தில் நடந்த கோவில் கொடை விழாவுக்கு சென்றார். நேற்று முன்தினம் இரவு மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்தபோது, வீட்டின் முன்பக்க கதவில் போடப்பட்டு இருந்த பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த ஒரு பவுன் எடை கொண்ட தங்க மோதிரங்கள், வெள்ளி கொலுசு, ரூ.22 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்மநபர் திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து ராஜரத்தினம் நேற்று சிப்காட் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர் ஹென்சன் பவுல்ராஜ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.