மாவட்ட செய்திகள்

படைப்புழு தாக்குதலால் சேதம் அடைந்த மக்காச்சோள பயிர்களுடன் திரண்டு வந்த விவசாயிகளால் பரபரப்பு

படைப்புழு தாக்குதலால் சேதம் அடைந்த மக்காச்சோளம் பயிர்களுடன் திரண்டு வந்த விவசாயிகளால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு கேட்டு கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

திருச்சி,

திருச்சி மாவட்டம் லால்குடி மற்றும் புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த மக்காச்சோள பயிர்கள் படைப்புழு தாக்குதலுக்கு உள்ளாகி சேதம் அடைந்து உள்ளன. கல்லக்குடி, மால்வாய், மேலரசூர், கீழரசூர், வரகுப்பை, ஊட்டத்தூர், கல்லகம், சாத்தப்பாடி பெருவளப்பூர், தெரணி பாளையம், நல்லூர், நெடுங்கூர், நெய்குளம், கூடலூர், சிறுகாம்பூர் உள்பட சுமார் 20 கிராமங்களை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் புழு கடித்து சேதம் அடைந்த மக்காச்சோள பயிர்களுடன் நேற்று காலை திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு சவுந்தரபாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் வந்தனர்.

அப்போது கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் ராஜாமணி தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்து கொண்டு இருந்தது. மக்காச்சோளப்பயிர்களை கையில் தூக்கி பிடித்தபடி அந்த அரங்கிற்குள் விவசாயிகள் வந்து மனு கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விவசாய சங்க பிரமுகர்கள் மணிமாறன், கருணாநிதி, ராஜேந்திரன், ராஜமாணிக்கம், சத்யா ஸ்ரீதர் ஆகியோர் கூறுகையில் மானாவாரி பயிராக மக்காச்சோளத்தை கடந்த செப்டம்பர் மாதம் சாகுபடி செய்தோம். ஏக்கருக்கு ரூ. 20 ஆயிரம் வரை செலவு செய்து உள்ளோம். புழு தாக்குதலால் பயிர்கள் நாசமாகி விட்டதால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறோம். எனவே ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்கி எங்களை காப்பாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.

மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் ராஜாமணி கூறுகையில் இந்த பிரச்சினையை அரசின் கவனத்திற்கு தனியாக கொண்டு சென்று இழப்பீடு வாங்கி தர முயற்சி செய்வேன். தனியார் கடைகளில் இருந்து விவசாயிகள் வாங்கிய விதைகளில் குறைபாடு இருந்ததா? படைப்புழு தாக்குதலுக்கு அவை காரணமா? என்பது பற்றி விதை சான்றிதழ் துறை அதிகாரிகளிடம் அறிக்கை பெற்று அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்