மாவட்ட செய்திகள்

மார்ச் மாதத்திற்குள் அனைத்து ஊராட்சிகளிலும் 100 சதவீதம் தனிநபர் சுகாதார வளாகம் அமைக்கப்படும்

தர்மபுரி மாவட்டத்தில் வருகிற மார்ச் மாதத்திற்குள் அனைத்து ஊராட்சிகளிலும் 100 சதவீதம் தனிநபர் சுகாதார வளாகம் அமைக்கப்படும் என்று விழிப்புணர்வு முகாமில் கலெக்டர் விவேகானந்தன் தெரிவித்தார்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி துறை சார்பில் மாவட்ட அளவிலான சுகாதார விழிப்புணர்வு முகாம் தர்மபுரியில் நடைபெற்றது. இந்த முகாமிற்கு கலெக்டர் விவேகானந்தன் தலைமை தாங்கினார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் சித்ரா முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மண்டல அலுவலர்கள், ஒன்றிய பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் சுகாதார பணியாளர்கள் பங்கேற்றனர்.

முகாமில் கலெக்டர் விவேகானந்தன் பேசியதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை, தூய்மை பாரதம் இயக்கம் ஆகியவற்றின் சார்பில் சுகாதார வளாகம் கட்டி தரப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டில் உள்ளது. அதே போல் 174 கிராம ஊராட்சிகள் 100 சதவீத திறந்த வெளியில் இயற்கை உபாதை கழித்தலற்ற ஊராட்சிகளாக மாற்றப்பட்டுள்ளன. வருகிற மார்ச் மாதத்திற்குள் தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள வீடுகளிலும் 100 சதவீத தனிநபர் சுகாதார வளாகம் கட்டப்படும். இதன் மூலம் திறந்தவெளியில் இயற்கை உபாதை கழித்தலற்ற மாவட்டமாக இந்த மாவட்டம் மாற்றப்படும். இதற்கு பொதுமக்கள் உரிய ஆதரவு அளிக்க முன்வர வேண்டும்.

இதுதொடர்பாக மகளிர் சுயஉதவிக்குழுக்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு குழுக்கள் ஆகியவற்றின் மூலமாக பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. திறந்த வெளியில் இயற்கை உபாதை கழிக்கும் பழக்கத்தை பொதுமக்கள் சாதாரணமாக நினைக்கிறார்கள். இவ்வாறு செய்வதின் மூலம் பல்வேறு நோய் தொற்றுகளுக்கு பொது மக்கள் ஆளாகிறார்கள். இத்திட்டத்திற்கென அரசு பல கோடி ரூபாய் செலவு செய்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.

மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் தனிநபர் இல்ல கழிப்பறைக்கென ரூ.12 ஆயிரம் அரசு மானியத் தொகையாக வழங்கி வருகிறது. அனைவரும் இத்திட்டத்தினை பயன்படுத்தி தனி நபர் இல்ல சுகாதார வளாகம் அமைத்து பயன்பெற முன்வர வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்