மாவட்ட செய்திகள்

ஆளில்லா குட்டி விமானம் மூலம் மாமல்லபுரம் முழுவதும் கண்காணிப்பு

மாமல்லபுரம் முழுவதும் ஆளில்லா குட்டி விமானம் மூலம் காண்காணிக்கப்பட்டது.

தினத்தந்தி

மாமல்லபுரம்,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று மாமல்லபுரம் காவல்துறை சார்பில் மாமல்லபுரம் துணை கோட்ட உதவி கண்காணிப்பாளர் சுந்தரவதனம், துணை போலீஸ் சூப்பிரண்டு அருள்மணி, இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் ஆகியோர் மேற்பார்வையில் அர்ச்சுணன் தபசு சாலை, கடற்கரைசாலை, ஐந்துரதம் சாலை, கிழக்கு ராஜவீதி, மேற்கு ராஜவீதி, பஸ் நிலைய சாலை, டி.கே.எம். சாலை உள்ளிட்ட மாமல்லபுரம் முழுவதும் ஆளில்லா குட்டி விமானம் மூலம் காண்காணிக்கப்பட்டது.

பொதுமக்கள் ஊரடங்கை மதித்து வீட்டில் இருக்கிறார்களா? குறிப்பிட்ட மருந்து கடை, காய்கறி கடை, மளிகை கடை தவிர மற்ற கடைகள் திறக்கப்பட்டுள்ளதா? என்பதை ஆளில்லா குட்டி விமானம் மூலம் படம் பிடித்து போலீசார் பதிவு செய்தனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு