மாவட்ட செய்திகள்

ஜனவரியில் மந்திரிசபை விரிவாக்கம் - எடியூரப்பா தகவல்

ஜனவரி மாதம் மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.

பெங்களூரு,

கர்நாடக மந்திரிசபையில் 16 இடங்கள் காலியாக உள்ளன. இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி வழங்க முதல்-மந்திரி எடியூரப்பா முடிவு செய்துள்ளார். டிசம்பர் மாத இறுதிக்குள் மந்திரிசபை விரிவாக்கம் நடைபெறும் என்று கூறப்பட்டது. அது தற்போது தள்ளிப்போய் உள்ளது. ஜனவரி மாதம் டெல்லிக்கு வரும்படி எடியூரப்பாவுக்கு பா.ஜனதா மேலிடம் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

டெல்லிக்கு வரும்படி பா.ஜனதா மேலிடம் என்னிடம் கூறியுள்ளது. புதிய மந்திரிகள் யார் என்பதை இந்த மாத இறுதிக்குள் முடிவு செய்வோம். மகர சங்கராந்தி பண்டிகைக்குள்(ஜனவரி மாதம்) மந்திரிசபை விரிவாக்கம் குறித்த செய்தி வரலாம்.

புதிய எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி வழங்குவது குறித்து எங்கள் கட்சி மேலிடத்தில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. மந்திரி பதவி வழங்குவோம் என்று அவர்களுக்கு உறுதியளித்தோம். அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவோம். இதில் எந்த சந்தேகமும் வேண்டாம். இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு