மாவட்ட செய்திகள்

சுரைக்காய் மனிதர்

8 அடி நீளத்தில் சுரைக்காய் விளைவித்து ஆச்சரியப் படுத்தியுள்ளார், பேராசிரியர் சியோ புஜன் சிங்.

சியோ புஜன் சிங் அந்த சுரைக்காயை புல்லாங்குழல் போல் உருமாற்றி இன்னிசை பாடியும் மகிழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் உத்தரபிரதேச மாநிலம் பைசாபாத் மாவட்டத்திலுள்ள வேளாண் பல் கலைக்கழகத்தில் பணிபுரிந்து வருகிறார்.

சிறுவயதிலே விவசாயத்தின் மீது இருந்த ஈடுபாட்டால் வேளாண் சார்ந்த முதுகலைப்பட்டப்படிப்பு முடித்திருக் கி றார். தாவரங்களின் வளர்ச்சி குறித்து பி.எச்டி. பட்டமும் பெற்றிருக்கிறார். விவசாயிகளுக்கு ஆதாயம் தரும் வீரியமிக்க விதைகளை கொண்ட தாவரங்களை வளர்ப்பது பற்றிய ஆராய்ச்சியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக் கிறார். அதன் ஒரு அங்கமாக 8 அடி நீளமுள்ள சுரைக்காய்களை உற்பத்தி செய்துள்ளார். அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இவரை சுரைக்காய் மனிதர் என்றே அழைக்கிறார்கள்.

எனது தந்தை ஆசிரியராக பணி புரிந்தவர். ஆனால் என் குடும்பத்தினரில் பெரும்பாலானோர் விவசாயிகள். அதனால் குழந்தை பருவம் முதலே எனக்கு விவசாயத்தின் மீது ஈடுபாடு ஏற்பட்டுவிட்டது. விவசாயம் சார்ந்த படிப்புகளையே படித்தேன். ஒருமுறை கென்யாவிலுள்ள மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு எடுக்க சென்றிருந்தேன். அங்குள்ளவர்கள் என்னிடம் அங்கேயே தங்கி பணிபுரியுமாறு கேட்டுக்கொண்டார்கள். என்னுடைய ஆராய்ச்சி என் தாய்நாட்டு விவசாயிகளுக்குத்தான் பயன் படும்படி இருக்க வேண்டும் என்று நாடு திரும்பினேன் என்கிறார்.

சுரைக்காய் மட்டுமின்றி பூசணிக்காய், கோவக்காய், முலாம்பழம், தர்பூசணி போன்றவற்றையும் வீரியமிக்க காய்கறிகளாக உருமாற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார், சியோ புஜன் சிங். இவர் உற்பத்தி செய்துள்ள சுரைக்காய் ரகம் நரேந்திர ஷிவானி என்று அழைக்கப்படுகிறது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்