மாவட்ட செய்திகள்

கன்று குட்டியை வெட்ட முயன்றதை தடுத்த போலீசாருக்கு கொலை மிரட்டல்

இறைச்சிக்காக கன்று குட்டியை வெட்ட முயன்றதை தடுத்த போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூர் பஸ் நிறுத்தம் அருகே நேற்று முன்தினம் திருவள்ளூர் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுகந்தி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அங்கு, திருப்பாச்சூர் கோட்டைகாலனியைச் சேர்ந்த ராஜன்(வயது 26), ரஞ்சித்(28), சின்னராசு(26) ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒரு கன்று குட்டியின் கால்களை கட்டி, அதன் கழுத்தை தரையில் அழுத்தி, இறைச்சிக்காக அந்த கன்று குட்டியை வெட்ட முயன்றனர்.

இதைகண்ட போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும், போலீசாரை தகாத வார்த்தையால் பேசியதுடன், போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்து, அவர்களுக்கு கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் சுகந்தி அளித்த புகாரின்பேரில் திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ராஜன், ரஞ்சித், சின்னராசு ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு