அப்போது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே.வி.தங்கபாலு, காங்கிரஸ் வேட்பாளர் அசோகனை ஆதரித்து வாக்குசேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழகமக்களை காக்கின்ற, விவசாயிகளின் பிரச்சினை களை தீர்க்கின்ற, தொழிலாளர்களை காக்கின்ற, புதிய தொழில்களை உருவாக்கின்ற ,புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி தருகின்ற அரசு வேண்டும். அப்படி ஒரு அரசு அமைந்தால் தான் படித்து வேலைஇல்லாமல் இருக்கின்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்க முடியும்.கடந்தகாலங்களில் தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் கூறிய அனைத்தையும் நிறை வேற்றி தந்துள்ளது. அதே போல் தற்போது வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் கூறி உள்ள அனைத்தையும் நிறை வேற்றி தருவார்கள். ஒருமாற்றம் வேண்டும் என்ற எண்ணத்தில் நான் அனைவரும் தி.மு.க. தலைவர் தளபதி தலைமையில் பயணத்தை தொடங்கி உள்ளோம். இந்தபயணம் வெற்றி பெற பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும். சமுதாயத்தை முன்னேற்ற தேவையான ஆட்சி வரவேண்டும். அந்த நல்லாட் சியை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தருவார். மு.க.ஸ்டாலினை முதல்-அமைச்சராக்க தமிழக வாக்கா ளர்கள் தயாராகி வருகிறார்கள்.
இந்தபகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக பேட்டியிடும் அசோகன் சிறந்தநிர்வாகி, பண்பாளர், பல தொழில்களை நடத்தி பலருக்கு வேலை வாய்ப்பு வழங்கிஉள்ளனர்.உங்கள் தொகுதிக்கு காங்கிரஸ்கட்சி ஒரு நல்ல வேட்பாளரை அறிவித்து இருக்கிறது. இவரைநீங்கள் வெற்றி பெற செய்ய வேண்டும்.உங்கள் தொகுதி பிரச்சினைகளை இவர் சட்டமன்றத்தில் பேசி தீர்த்து வைப்பார். இந்த தொகுதியில் வெற்றி பெற்று அசோகன், முதல்வராக பொறுப்பு ஏற்க உள்ள மு.க.ஸ்டாலின் கரத்தை வலுப் படுத்துவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதற்கு நீங்கள் எல்லாம் தவறாமல் கை சின்னத்தில் வாக்கு அளித்து அசோகனைஅதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் காங்கிரஸ் வேட் பாளர் அசோகன் செங்கமல நாச்சியார்புரத்து பஞ்சாயத் துக்கு உட்பட்ட இந்திராநகர், திருப்பதி நகர், ஸ்டேட் பாங்க் காலனி, சாரதாநகர், என்.ஜி.ஓ. காலனி, கோபால் நகர், கங்கா குளம், சாமிநத்தம் கீழூர், சாமிநத்தம், வேண்டுராயபுரம், கோப்பைய நாயக்கன்பட்டி, மாலையூரணிப்பட்டி, சரஸ்வதிப் பாளையம், அய்யானார் காலனி, சசிநகர், காயாம்புநகர், ராமசாமிபுரம் காலனி, சித்துராஜபுரம் ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்தார். அவருடன் தி.மு.க. ஒன்றிய செயலாளரும், சிவகாசி ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவருமான விவேன்ராஜ், கணேசன், பைபாஸ் வைரம், சாமுவேல் நாடார், சசிநகர் முருகேசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.