மாவட்ட செய்திகள்

உதவியாளர் பணிக்கான நேர்காணல் ரத்து: கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதம்

நேற்று சிலர் நேர்காணலுக்காக தயாராகி அரசு கல்லூரிக்கு வந்து விட்டனர். பின்னர் நேர்காணல் ரத்து செய்யப்பட்டது பற்றிய தகவல் அறிந்ததும் அவர்கள் ஏமாற்றமடைந்தனர்.

தினத்தந்தி

கரூர்,

கரூர் தாந்தோன்றிமலை அரசு கல்லூரியில், கால்நடை பராமரிப்புத்துறையில் உதவியாளர் பணிக்கான நேர்காணல் பிப்ரவரி மாதம் 22 முதல் 25-ந்தேதி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. பின்னர் சில நிர்வாக காரணங்களால் அந்த நேர்காணல் ரத்து செய்யப்படுவதாகவும், நேர்காணலுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று சிலர் நேர்காணலுக்காக தயாராகி அரசு கல்லூரிக்கு வந்து விட்டனர். பின்னர் நேர்காணல் ரத்து செய்யப்பட்டது பற்றிய தகவல் அறிந்ததும் அவர்கள் ஏமாற்றமடைந்தனர். இதனால் கொளந்தாகவுண்டனூரில் உள்ள கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் அலுவலகத்திற்கு சென்று அதிகாரிகளிடம் முறையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே இது குறித்து தகவல் அறிந்ததும் அங்கு வந்த, பசுபதிபாளையம் போலீசார் அந்த நபர்களை சமதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது